போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தலித் பெண், பாரதிய ஜனதா தலைவர் தேவேந்திர தம்ராகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். புகாரைத் தொடர்ந்து, மாநில தலைநகர் போபாலில் இருந்து 269 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அசோக் நகர் மாவட்டத்தில் கட்சியின் ஊடக பொறுப்பாளரான தம்ராகர் குற்றம் நடந்ததாகக் கூறப்பட்ட சிங்க்ராலி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அந்த அறிக்கையின்படி, 2019 நவம்பர் 30 ஆம் தேதி தம்ராகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனது போலிஸ் புகாரில் கூறியதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அந்த பெண் கூறினார்.

நடந்த குற்ற சம்பவம் பற்றி அந்த பெண் கூறியதாவது:  “குற்றம் நடந்த நாளில் அவர் என் வீட்டிற்கு வந்தார். அவர் வாரணாசிக்குச் செல்வதாகவும், சிங்க்ராலி மாவட்டத்தில் உள்ள தனது நண்பரின் சுரங்கத்தில் வேலை பெற எங்களுக்கு உதவுவதால் நாங்கள் அவருடன் செல்ல வேண்டும் என்றும் கூறினார். மறுநாள் அவரது காரில் சிங்க்ராலியை அடைந்தோம். அவர் என் கணவருக்கு ஒரு தபாவில் மதுபானம் வாங்கித் தந்தார்.

பின்னர், என் கணவர் குடிபோதையில் இருந்ததால், நான் அவருடன் அவரது நண்பரின் சுரங்கத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கூறினார். அவர் என்னை ஒரு ஒதுங்கிய இடத்திற்கு அழைத்துச் சென்று என் எதிர்ப்பை மீறி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்தை நான் போலிசில் புகார் செய்தால் அல்லது யாரிடமும் கூறினால் நான் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் மிரட்டினார். ”

திங்களன்று, குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு இருந்து மேலதிக விசாரணைக்காக அவர் காவலில் வைக்கப்பட்டார்.