Random image

ராகுலுக்கு விமானம் வாங்க வீட்டை விற்க தயாரான காங்கிரஸ் தலைவர்

டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பான விமானம் ஒன்றை வாங்க தனது வீட்டை விற்று பணம் தரப்போவதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அசோக் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்காக ஒரு தனி விமானத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணம் செய்தார்.   அந்த விமானம் 20 வினாடிகளில் விபத்தில் இருந்து தப்பியது.   விமானம் ஒரு பக்கமாக சாய்ந்து கீழே விழுந்து நொறுங்க இருந்த நிலையில் விமானி சமயோசிதாமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்தார்.

இது நாட்டு மக்களிடையே அப்போது கடும் பரப்பரப்பை உண்டாக்கியது.   மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அசோக் ஜெய்ஸ்வால் செய்தித்தாள்களில் தனது வீடு மற்றும் கடைகளை விற்க உள்ளதாகவும் அதைக் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பான விமானம் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அசோக், “வரும் 2019 பாரளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிகப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.  அதனல் அவருக்கு பாதுகாப்பான விமானம் தேவையாகும்.  அதனால் நான் எனக்கு சொந்தமான வீடு மற்றும் கடைகளை விற்க தீர்மானித்துள்ளேன்.  எனது நண்பர் ஒருவரும்  இதே போல் தனது உடைமைகளை விற்க உள்ளார்.  இந்த பணத்தை நாங்கள் ராகுல் காந்த்க்கு அனுப்பி விமானம் வாங்கச் சொல்ல திட்ட்மிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.