ம. பி. தேர்தல் : அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கு மீண்டும் வாய்ப்பளிக்காத பாஜக

போபால்

த்திய பிரதேச சட்டப்பேரவை தேர்த்லில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.


இந்த மாதம் 28 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.

இன்று பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 16 பெண்கள் உள்ளிட்ட 177 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது. இன்னும் 53 தொகுதிகளுக்கான வேட்பாளர் குறித்து பாஜக இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த பட்டியலில் 3 அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இவ்வாறு வாய்ப்பு அளிக்கப்படாதவர்களில் பல பெண் உறுப்பினர்களும் உள்ளனர். இந்த பட்டியல் பாஜகவினரிடையே கடும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.