தினமும் 24 கி.மீ. சைக்கிள்.. 98 % மார்க் பெற்ற மாணவி..

--

தினமும் 24 கி.மீ. சைக்கிள்.. 98 % மார்க் பெற்ற மாணவி..

மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள அஜ்னோல் கிராமத்தைச் சேர்ந்த ரோஷ்ணி,  12 கிலோ மீட்டர் தொலைவில் மேகான் என்ற ஊரில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

புத்தகப் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு  தினமும்  சைக்கிளில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.

மழைக் காலங்களில் சில நேரம் சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கும், அப்போது அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கி விடுவார்.

சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்துவது இல்லை.

படிப்பில் படு சுட்டி.

அண்மையில் நடந்து முடிந்த 10 ஆம் வகுப்புத் தேர்வில் ரோஷ்ணி, 98. 5 % மதிப்பெண் பெற்று , தனது கிராமத்துக்குப் பெருமை தேடித்தந்துள்ளார்.

கணக்கு பாடத்திலும், அறிவியல் பாடத்திலும் நூற்றுக்கு நூறு வாங்கியுள்ள ரோஷ்ணியின் கனவு என்ன?

‘’ ஐ.ஏ.எஸ்.படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்பது எனது ஆசை. கலெக்டருக்கு படித்தால், மக்களுக்கு நல்ல காரியங்கள் செய்யலாம் எனக்  கேள்விப் பட்டுள்ளேன். எனவே ஐ.ஏ.எஸ். படித்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்’’ என்கிறார், சாதனை மாணவி.

-பா.பாரதி.