போபால்

வியாபம் ஊழல் வழக்கில் நிலுவையில் உள்ள 1200 புகார்களை மீது மத்திய பிரதேச அரசு விசாரணையில் சேர்க்க உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வியாபம் எனப்படும் மத்திய பிரதேச தேர்வாணையம் உயர்கல்விக்கு மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேlலைவாய்ப்புக்கான தேர்வுகளை நடத்தி வந்தது.    இந்த தேர்வுகளில் கலந்துக் கொண்டோர் லஞ்சம் அளித்து வேலை வாய்ப்பு  மற்றும் உயர்கல்விக்கான இடங்களை பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் வியாபம் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நடத்திய சிறப்பு விசாரணைக்குழு  சுமார் 3000 பேரை கைது செய்துள்ளது.  இதில்  ஒரு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நிலை அதிகாரிகள் அடங்குவர்.     இதில் முன்னாள் பாஜக அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா மற்றும் 10 பேர் போதிய சாட்சியங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.   அத்துடன் பல புகார்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிலுவையில் உள்:ளன.

தற்போது சிபிஐ 180 புகார்களை விசாரித்து வருகிறது.   இந்நிலையில் மத்திய அரசு வியாபம் வழக்கில் நிலுவையில் உள்ள 1200 புகார்கள் மீதும் விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது.   இந்த விசாரணையை சிறப்பு விசாரணைக் குழு விரைவில் தொடங்கும் என மத்தியபிரதேச அரசு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.