போபால்

முந்தைய மத்தியப் பிரதேச அரசு நடத்தி வந்த பாஜக தொண்டர்களுக்கான அரசு திட்டங்களை தடை செய்ய தற்போதைய அரசு முடிவு செய்துள்ளது.

                                    நிதி அமைச்சர் தருண்

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக விடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.   காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் மத்தியப் பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.    கடந்த பாஜக அரசு அறிவித்திருந்த பல உத்தரவுகளை தற்போதைய காங்கிரஸ் அரசு ரத்து செய்து வருகிறது.

மத்தியப் பிரதேச மாநில பாஜக தொண்டர்களுக்காக முந்தைய பாஜக அரசு பல அரசு திட்டங்களை அறிவித்திருந்தது.   அந்த திட்டங்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு ம. பி. நிதி அமைச்சர் தருன் பானோத் உத்தரவிட்டுள்ளார்.   ஏற்கனவே முந்தைய அரசு அறிவித்திருந்த தீன் தயாள் வனாஞ்சல் திட்டத்தை அரசு ரத்து செய்துள்ளது.

இந்த திட்டம் முந்தைய அரசால் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த திட்டத்தை அறிவித்த முந்தைய வனத்துறை அமைச்சர் கவுரிசங்கரின் மனை கிரண் இந்த திட்டத்தின் தலைவியாக இருந்துள்ளார்.   அத்துடன் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளவர்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அத்துடன் இன்னொரு முக்கிய திட்டமான லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் சம்மான் நிதி என்னும் ஓய்வூதிய திட்டம்  கடந்த 2008 முதல் நடைபெற்று வருகிறது.   கடந்தா 1975-77 ஆம் வருடம் அவசரநிலை  நேரத்தில் மிசாவின் கீழ் கைது செய்யப்பட்ட 4000 பேருக்கு இந்த திட்டம் உதவித் தொகை வழங்கி வருகிறது.   பயனாளிகளின் மறைவுக்குப் பின் அந்த உதவித்தொகையில் 50% அவர்களுடைய வாரிசுகளுக்கு வழஙக்ப்படுகிறது.

இந்த திட்டமும் விரைவில் ரத்து செய்ய வகை செய்யும் மசோதாவை இந்த மாதம் நடைபெற உள சட்டப்பேர்வை கூட்டத்தில் தாக்கல் செய்ய அரசு உத்தேசித்துள்ளது.     இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மாதம் ரூ.25000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.   இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டால் அரசுக்கு வருடத்துக்கு சுமார் ரூ.75000 கோடி வரை செலவு குறையும் என கூறப்படுகிறது.

மேலும் இது போல  பல திட்டங்களால் ஏராளமான பாஜக தொண்டர்கள் முந்தைய ஆட்சியில் பலனடைந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.