டெல்லி:

த்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி முதல்வர் கமல்நாத் தலைமையில் நடைபெற்று வருகிறது. அங்கு, அவருக்கும்,  ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பூசல் காரணமாக ஆட்சி கவிழும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், கடந்த இரு நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தலைமறைவாக இருந்து வந்த  ஜோதிராதித்யா சிந்தியா இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் உடனிருந்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் ஜோதிராதித்யா சிந்தியா ன தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் சேரலாம் என தகவல் வெளியாகி வருகிறது… இது ம.பி. அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்ககாத நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இதனால்  15ஆண்டுகால பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தது.

230  கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை. ஆனால், நடைபெற்று முடிந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்களும், பாஜகவுக்கு 109 இடங்களும்  கிடைத்துள்ளன. இது தவிர சுயேச்சைகள் 4, பகுஜன் சமாஜ் கட்சி 2 மற்றும் சமாஜ்வாதி கட்சி 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

அதேவேளையில் ம.பி. முதல்வர் பதவிக்கு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கமல்நாத் ஆகிய இருவரும் போட்டியிட, காங்கிரஸ் தலைமை சமரசம் பேசி, கமல்நாத்தை முதல்வராக அமர்த்தியது.

இந்த நிலையில், அங்கு காலியாகும், 3 மாநிலங்களவை காலியிடங்களுக்கு 26-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இது தொடர்பாக அங்கு மீண்டும்  உட்கட்சி பூசல் தலைதூக்கியது. கட்சி தலைமையிடம் அதிருப்தி அடைந்த  காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்கள் 17 பேருடன் திடீரென எஸ்கேப்பானார். இதனால் மாநிலத்தில் பரபரப்பு நிலவியது.

அவர்களை பாஜகவினர் கடத்தி சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டது, சிந்தியா உள்பட, 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் போனை சுவிட்ச் ஆஃப் செய்திருந்தனர். அவர்கள் பெங்களூருவில் உள்ள ஒர தனியார் விடுதியில் தங்கியிருந்தாக கூறப்பட்டது.

அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டது. ஆனால், சிந்தியாவோ பாஜக தயவுடன் முதல்வர் பதவியை பிடிக்க திட்டம் தீட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக செய்யும் சதி என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால்,  இது காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரம் என மாநில பாஜக மூத்த தலைவர் சிவராஜ்சிங் சவுகான் கூறி வருகிறார்.,.,.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா இன்று காலை தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்… அப்போது அமித்ஷாவுடன் உடன் இருந்ததாககூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணையலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன…

இதனால்,  கமல்நாத் ஆட்சி கவிழும் சூழல் உருவாகியிருக்கிறது.