நடிகையும் எம்.பியுமான நவ்னீத் கவுருக்கு கொரோனா தொற்று…!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன் , அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் , விஷால் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.

இந்நிலையில் நடிகையும் எம்.பியுமான நவ்னீத் கவுர் மற்றும் அவருடைய கணவர் ரவி ராணா ஆகிய இருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள நவ்னீத் கவுர், என் மகள், என் மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.