அதிசயம்! தூக்கில் தொங்கி உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை

மத்தியப்பிரதேசத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கில் தொங்கில் தற்கொலை செய்துக் கொண்ட நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

baby

மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் அருகே கட்னி நகரை சேர்ந்த விவசாயி சந்தோஷ். இவரது மனைவி லட்சுமி தாகூர் 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷிற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல் நேற்றும் கணவன் – மனைவியிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

சிறிது நேரத்திற்குள் சந்தோஷ் தூங்க சென்றதும், வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி லட்சுமி மாட்டுத்தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். விடிந்ததும் மனைவியை தேடிய சந்தோஷ், மாட்டுத் தொழுவதில் தூக்கில் தொங்கியபடி லட்சுமி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்க முயற்சித்தனர். அப்போது லட்சமிக்கு பிரசவம் ஏற்பட்டது தெரிய வந்தது. இறந்த லட்சுமிக்கு குழந்தை பிறந்ததை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மருத்துவமனைக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பிறகு, லட்சுமி தூக்கில் தொங்கியப்படியே இருந்த போது மருத்துவர்கள் குழந்தையின் தொப்புல் கொடியை அறுத்து மீட்டனர்.

தாய் இறந்தும் உயிர் பிழைத்த அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுஅ வருகிறது. அதன்பின்னர் லட்சுமியின் சடலத்தை கீழே இறக்கி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.