மத்தியபிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் பயணம்….

போபால்:

த்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக 22 அதிருப்தி எம்எல்எக்கள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், மற்ற காங்கிரஸ் எம்எல்எக்களை பாதுகாப்பு கருதி காங்கிரஸ் தலைமை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளது.

கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆதரவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அவரது ஆதரவாளர்களதன  22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ஆட்சிக் கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆட்சியைக் காப்பாற்றும் முனைப்பில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள், மீதமுள்ள காங்கிரஸ் எம்எல்எக்களை, ஜெய்ப்பூருக்கு அழைத்துச்சென்று பாதுகாப்பாக வைக்க முடிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து முதல் அக்கட்சியின் 80 சட்டப்பேரவை உறுப்பினர்கள், மூன்று சொகுசுப் பேருந்துகளில் போபால் விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர். அவர்கள் அங்கிருந்து விமானத்தில் ஜெய்ப்பூர் செல்லவிருக்கின்றனர். இதற்கான ஏற்பாட்டை ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் செய்துள்ளார்.

இவர்கள் அனைவரும், ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்தாண்டு நவம்பரில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்தே தனியார் விடுதியில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.