ஜபல்பூர்:

த்தியபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ஆசிரியை ஒருவர், அயோத்தி ராமர்கோவில்கட்ட வேண்டும் என்று கடந்த 27 ஆண்டுகளா பால் பழம் மட்டுமே அருந்தி, உண்விரதம் மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று தனது 81வயதில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி. இவருக்கு தற்போது வயது 81 ஆகிறது. சமஸ்கிருத ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தால் மனஉளைச்சல் அடைந்தார். அப்போது அவருக்கு 54 வயது இருந்தது. அன்றிலிருந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவரது தினசரி உணவு  பால், பழம் மட்டுமே.

தற்போது உச்சநீதி மன்றம் ராமஜென்ம பூமி இந்துக்களுக்கே சொந்தம் என்றும், அங்கு ராமர்கோவில் கட்டலாம் என்றும் தீர்ப்பு வழங்கிய நிலையில், தனது 27ஆண்டு விரதத்தை கைவிட முடிவு செய்துள்ளார். தற்போது அவருக்கு வயது 81.

தனது தாயின் உண்ணாவிரதம் குறித்து, அவரது மகன், எனது அம்மா ஓய்வு பெற்ற சமஸ்கிருத ஆசிரியர் என்றும், தீவிர ராமர் பக்தை என்றும் கூறி உள்ளார். நாங்கள் அவரது வயதை கருத்தில் கொண்டு, எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் உணவை எடுக்க மறுத்து விட்டார்.

‘இப்போது,  அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய தகவலை கேள்விப்பட்டதும்  எனது தாய் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார். தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதுமாறு என்னிடம் கூறினார். எனது தாயின் விரதம் ஒரு வழியாக நிறைவேறியதால் அவரது விரதத்தை விழா நடத்தி நிறைவுபெற செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.