ஐதராபாத்:

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் தங்களது எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ஆந்திராவிற்கு 5 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். 10 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிப்போம் என்று பாஜக கூறியது. 15 ஆண்டுகளாக சிறப்பு அந்தஸ்தை போராடி பெறுவேன் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஆனால் மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டிலும் இது இடம்பெறவில்லை.

ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் எங்களது எம்.பி.க்கள் போராடுவார்கள். அப்படியும் சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை என்றால் எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள்’’ என்றார்.