மிஸ்டர் லோக்கல் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு…!

ராஜேஷ் இயக்கி ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார்.

மிஸ்டர் லோக்கல் படம் மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராதிகா சரத்குமார் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்க இவர்களுடன் யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.