Random image

Mr. லோக்கல்’ படம் ‘மன்னன்’ படத்தின் ரீமேக் கிடையாது : சிவகார்த்திகேயன்

 

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற 17-ம் தேதி ரிலீஸாகும் படம் ‘Mr. லோக்கல்’. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

இந்தப் படம், ரஜினி, குஷ்பு, விஜயசாந்தி நடிப்பில் வெளியான ‘மன்னன்’ படத்தின் ரீமேக் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இதை மறுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இது முழுக்க முழுக்க காமெடிப் படம், கொஞ்சம் எமோஷன்ஸ் இருக்கும். ‘ரெமோ’வுக்குப் பிறகு இந்தப் படத்துலதான் நிறைய காமெடி பண்ணிருக்கேன்.

மன்னன் படத்தில் ஒருவருக்கு ஒருவர் போட்டி இருக்கும் , அது போல இந்தப் படத்துல கொஞ்சம் இருக்கும் அவ்வளவு தான் என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.