‘கோமாளி’ படத்துக்குச் புதிய சிக்கல்…!

ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘Mr.லோக்கல்’. இந்தப் படம் படுதோல்வியைத் தழுவியது.எம்.ஜி. (மினிமம் கியாரண்டி) முறையில் ‘Mr.லோக்கல்’ படத்தை வாங்கிய திருச்சி விநியோகஸ்தருக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் ‘கோமாளி’ படத்துக்கு திருச்சி ஏரியாவில் தடை விதித்திருக்கிறார்கள். ‘Mr.லோக்கல்’ படத்தை தமிழகம் முழுக்க விநியோகம் செய்த சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தான், ‘கோமாளி’ படத்தை வெளியிடுகிறது.

கட்டப் பஞ்சாயத்து முறையில் இந்தப் படத்தை வெளியிட மாட்டோம் என்று திருச்சி திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர் சங்கமும் சொல்கிறது.

கார்ட்டூன் கேலரி