எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி: சுகாதாரத்துறை செயலாளருக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

மதுரை:

ரசு மருத்துவமனைகளில்  எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி செய்து தராத தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மதுரை உயர்நீதி மன்றம் கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மதுரை அருகே உள்ள  கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில், அரசு மருத்துவமனைகளில்  எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி செய்ய வேண்டும் என்று வழங்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையை  தொடர்ந்து, அரசு தலைமை மருத்துவமனை களில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தரப்படும் என தமிழக சுகாதாரத் துறை சார்பில் கூறப்பட்டது.

ஆனால், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையை தொடர்ந்து, சுகாதாரத்துறை செயலாள ருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை  நோட்டீஸ் ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.