ஜி.எஸ்.டி கீழ் வரும் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி) குறித்த விதிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யை எம்.ஆர்.பி.யுடன் எப்படி கணக்கீடு செய்வது என்பது வாடிக்கையாளர் மற்றும் வியாபாரிகள் மத்தியில் குழப்பம் நிலவி வந்தது.

‘‘ஜி.எஸ்.டி.யால் பொருளின் எம்ஆர்பி உயர்ந்தால் தயாரிப்பாளர், இறக்குமதியாளர், பேக்கிங் செய்வோர் என யாராவது ஒருவர் புதிய எம்ஆர்பி குறித்து 2 நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்க வேண்டும். பொருளின் பேக்கிங் மீது மாற்றியமைக்கப்பட்ட ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும். இரு விலை ஸ்டிக்கரும் இடம்பெற்றிருக்க வேண்டும்’’ என நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் அவினாஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

‘‘புதிய விதிமுறைகளை கடைபிடிக்காத கடைக்காரர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘‘அனைத்து தயாரிப்பாளர்களும், வர்த்தகர்களும் தங்களிடம் உள்ள இருப்புகளை அடுத்த 3 மாதம் வரை அதாவது செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த புதிய விதிமுறைகளை பின்பற்றி விற்பனைக்கு அனுப்பல £ம்’’என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘‘ஜி.எஸ்.டி.யால் விலை குறைந்துள்ள பொருட்களின் விபரங்களை விளம்பரம் வெளியிட தேவையில்லை. ஆனால் புதிய மற்றும் பழைய எம்ஆர்பி ஸ்டிக்கர் கட்டாயம் ஒட்ட வேண்டும்’’ என மத்திய நிதி அமை ச்சகம் தெரிவித்துள்ளது.

‘‘பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களின் விலை அதிகம் என்பதால் புதிய ஸ்டிக்கரை மட்டும் ஒட்டி செப்டம்பர் மாதம் வரை இருப்பில் உள்ளவற்றை விற்பனை செய்யலாம்’’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘ஜிஎஸ்டி குறித்த மாபெரும் பயிற்சி வகுப்பை அரசாங்கம் நடத்தும். அதை அனைத்து குடிமக்களும், பங் குதாரர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதை இணையதளத்திலும் பார்க்கலாம்’’ என்று வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

‘‘ஜிஎஸ்டி.க்கு முந்தைய மற்றும் பிந்தைய பொருட்களின் விலை மற்றும் விநியோகத்தை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் 15 செயலாளர்கள் அடங்கிய மத்திய குழு ஜிஎஸடி.யை கண்காணிக்கும்’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘‘ஜிஎஸ்டி அமல்படுத்தும் போது ஆரம்ப கட்டத்தில் சில பிரச்னைகள் வரும். இதற்கு மட்டுமல்ல. எந்த திட்டமானாலும் பிரச்னைகள் வரத் தான் செய்யும். இந்த பிரச்னைகள் விரைந்து கலையப்படும். இதை விரைந்து அனைவரும் பயிற்று விக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி என்பது 1947ம் ஆண்டு முதல் இந்தியாவின் மிக லட்சிய வரி சீர்திருத்த முறையாகும். மத்திய மாநில அரசுகளின் 12 வரி விதிப்புகளை ஒரே சீரான முறையில் கொண்டு வரும் திட்டமாகும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 2 சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட புதிய வரி விதிப்பு முறையை மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.