மதுரை:

துரை மீனாட்சி அம்மன் கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.

அரசியலை விட்டு விலகி விட்டதாக கூறி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறினார். பின்னர், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை விட்டார். திடீரென்று குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்ட சசிகலா திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் பிரம்மஹத்தி தோஷம் நீங்க நட்சத்திர லிங்கத்திற்கு யாகம் செய்து வழிபட்டார்.  ராமேஸ்வரம் ராமநாதாசாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக சசிகலா நேற்று ராமநாதபுரம் சென்றார்.  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று அதிகாலையில் நடைபெற்ற ஸ்படிக லிங்க பூஜையில் தரிசனம் செய்தார். சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சசிகலா கோயில் கோயிலாக சென்று சாமி கும்பிடுவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.