Random image

கோயம்புத்தூர் : பிரபஞ்ச அழகிப்ட்டம் வென்ற பெண் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

கோயம்புத்தூர்

திருமணம் ஆனோருக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற பெண் கோவை உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் நகரில் உள்ள கவுண்டன் பாளையம் பகுதியில் வசிப்பவர் சோனாலி பிரதித்.   திருமணமான பெண்களுக்கான அழகி போட்டிகளில் இவர் வெற்றி பெற்றவர் ஆவார்.    இவர் கடந்த 2015, 2016 ஆம் ஆண்டுகளில் உள்ளூரில் நடந்த அழகிப் போட்டியில் திருமதி கோயம்புத்தூர் பட்டம் வென்றுள்ளார்.

அத்துடன் 2017 ஆம் அண்டில் புனேவில் நடந்த அழகிப் போட்டியில் இவர் திருமதி இந்தியா பட்டத்தை வென்றார்.   அத்துடன் சமீபத்தில் நடந்த திருமணமான பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துக் கொண்டு அங்கு திருமதி யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில் சோனாலி பிரதித் அதிமுக சார்பில் கோவை நகர மேயர் மற்றும் 17 ஆம் வட்டம் மாநகராட்சி உறுப்பினர் ஆகிய தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு  அளித்துள்ளார்.  இவர் விருப்ப மனு அளித்த புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.