காயமடைந்து தனது வீட்டின் புல்வெளியில் விழுந்து கிடந்த பறவையை, தனது தந்தை மற்றும் தாயுடன் இணைந்து காப்பாற்றியதாக, பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் மகள் ஷிவா, தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தோனியின் மகள் ஷிவா ஜூன் 09 வெளியிட்டுள்ள  தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ”காயமுற்று மயக்கமடைந்த பறவையை பப்பாவும் ( அப்பா தோனி), மம்மாவும் ( அம்மா)  காப்பாற்றி பறக்க விட்டனர் என உருக்கமாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ஷிவா வெளியிட்டுள்ள படத்துடனான தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,. “இன்று மாலை என் வீட்டு புல்வெளியில் ஒரு பறவை மயக்கத்தில் கிடப்பதைக் கண்டேன். நான் பப்பா மற்றும் மம்மாவுக்காக கத்தினேன். பப்பா பறவையை கையில் பிடித்து அதற்கு கொஞ்சம் தண்ணீர் கொடுக்கச் செய்தார். சிறிது நேரம் கழித்து அது கண்களைத் திறந்தது. நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்,

“நாங்கள் அவளை சில இலைகளின் மேல் ஒரு கூடையில் வைத்து வைத்தோம். இந்த பறவை யானது  கிரிம்சன் மார்பக பார்பெட் என்றும், காப்பர்ஸ்மித் ( crimson-breasted Barbet) என்று அழைக்கப்படுவதாக  எனது மம்மா என்னிடம் கூறினார். என்ன அழகான, அழகான சிறிய பறவை”

“பின்னர் திடீரென்று அந்த பறவை  பறந்து சென்றது, அது தங்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் மம்மா அவள் அம்மாவிடம் சென்றதாக என்னிடம் சொன்னாள். நான் அவளை மீண்டும் பார்ப்பேன் என்று நான் நம்புகிறேன்!” என்று உருக்கமாக பதிவிட்டு உள்ளார்.

தோனி மகள் ஷிவாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது… இந்த பதிவை சிஎஸ்கே தனது டிவிட்டர் வளைதளத்திலும் பதிவிட்டு உள்ளது.