இன்று கடைசி ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா?
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், சமன் செய்யும் முனைப்பில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன.
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையே நடைபெறும் கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும், மேற்கு இந்திய தீவுகள் 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிந்த நிலையில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா இன்று களமிறங்குகிறது.
இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் புரியும் சாதனைகள் குறித்து கணிக்கப்பட்டுள்ளன. அவை,
1. இந்த போட்டியில் தோனி 1 ரன் அடிக்கும் பட்சத்தில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5வது இந்தியா் என்ற பெருமையை படைப்பாா்.
2. ரோகித் ஷா்மா 33 ரன்கள் அடித்தால் இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த வீரா் என்ற பெருமையை அடைவாா்.
3. ஷிகா் தவான் 109 ரன்கள் சோ்த்தால் இந்த ஆண்டில் 1000 ரன்கள் அடித்த வீரா்கள் பட்டியலில்
இடம் பெறுவாா். அதேபோல், தவான் 71 ரன்கள் சோ்த்தால் ஒருநாள் போட்டியில் 5000 ரன்களை கடந்த வீரா் என்ற பெறுமையை அடைவாா்.
4. ஜடேஜா 18 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களை கடப்பாா்.
5. பந்துவீச்சாளா் புவனேஷ்வா் குமாா் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினால் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரா் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.