மெல்போர்ன்:

ஒருநாள் போட்டியின் கனவுஅணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளார்.  அதுபோல டெஸ்ட் ஆட்டத்துக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களை கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியை அறிவித்தது. கடந்த 2010ம் ஆண்டு வீரர்களை கணக்கில் கொண்டு இந்தஅணிவிக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியா தொகுத்துள்ள இந்த அணியில், ஒருநாள் போட்டியின் கேப்டனாக உலகக் கோப்பை வென்ற இந்திய சூப்பர் ஸ்டார் எம்.எஸ்.தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தொடக்க வீரர்களாக இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ஹசிம் அம்லா உள்பட 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகேந்திர சிங் டோனி (கேப்டன்), ரோகித்சர்மா, ஹசிம் அம்லா, விராட்கோலி, டிவில்லியர்ஸ், சகீப்-அல்-ஹசன், ஜோஸ் பட்லர், மிச்சேல் ஸ்டார்க், டிரண்ட் போல்ட், மலிங்கா, ரஷித்கான்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள டெஸ்ட் கனவு அணி வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), அலிஸ்டர் கூக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவன் ஸ்மித், டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், டெயில் ஸ்டெயின், ஸ்டூவர்ட் பிராட், நாதன் லயன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.