10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மேன் ஆப் தி சீரிஸ்’ விருதை வென்ற தோனி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா வென்ற நிலையில் மகேந்திர சிங் தோனி ‘மேன் ஆப் தி சீரிஸ்’ விருதை பெற்றார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு ‘மேன் ஆப் தி சீரிஸ்’ விருதை தோனி பெற்றுள்ளார்.

man

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், முதலில் நடந்து முடிந்த டி20 தொடர் டிராவில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் ஒரு போட்டி டிராவில் முடிய 2-1 என வெற்றிபெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடந்து முடிந்த்து.

இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று தொடரை சமன் செய்தது. இதனை தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்தது.

india

இதில் இந்திய அணியின் சாஹல் 6விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி ஆகியோர் தலா 2விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 231ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ரோஹித் 9 ரன்களிலும், தவான் 23ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தோனியும் 46ரன்களில் வெளியேறினர். இதனை தொடர்ந்து தோனி மற்றும் கேதர் ஜாதவ் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணி 49.2 ஓவர்களில் 3விக்கெட் இழந்து 234ரன்கள் குவித்தது. இதில் தோனி 87 ரன்களிலும், ஜாதவ் 61ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. இந்த ஒரு நாள் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்த தோனி ’மேன் ஆப் தி சீரிஸ்’ விருதை பெற்றார். முதல் ஒரு நாள் போட்டியில் 51 ரன்னும், 2ஆவது ஒரு நாள் போட்டியில் 55 (நாட் அவுட்) ரன்னும் தோனி எடுத்திருந்தார். 3 போட்டிகளையும் சேர்த்து தோனி 193 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 வருடத்திற்கு பிறகு தோனி மீண்டும் ‘மேன் ஆப் தி சீரிஸ்’ விருது பெற்றார். இதுவரை மகேந்திர சிங் தோனி 7 முறை ’மேன் ஆப் தி சீரிஸ்’ விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.