Random image

ஆஸ்திரேலியா , நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கும் தோனி!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா, எம்.எஸ். தோனி உள்ளிட்டோருக்கு இந்த தொடரில் பங்கேற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Indian

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20, 4போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்ரும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதனை தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அப்போது 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களின்
பெயர்களை தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்டியாவும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரன டி20 போட்டியில் இடம்பெறாத எம்.எஸ்.தோனியின் பெயரும் தற்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர்கள் நடைபெற்று வருவதல் அடுத்த மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகள் தொடங்கப்பட உள்ளன.

அந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியிலும் தோனி இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விபரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல் ராகுல், ஷிகர் தவான், ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், எம்.எஸ் தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சஹால், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, கலீல் அகமது, முகமது சமி.