சக வீரர்களுக்கு தனது ரெஸ்டாரண்டில் விருந்து அளித்த தல ’தோனி’…!

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ராஞ்சியில் உள்ள தனது ரெஸ்டாரண்டில் சக வீரர்களுக்கு விருந்து அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ராஞ்சியில் நடைபெறுவதால் அங்கு தங்கியுள்ள வீரர்களுக்கு தோனி விருந்து அளித்து சிறப்பித்துள்ளார்.

doni

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப்பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி வெள்ளிக்கிழமை ராஞ்சியில் நடைபெற உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி எம்.எஸ். தோனிக்கு சொந்த ஊராகும். அங்கு தோனிக்கு சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் ராஞ்சிக்கு சென்றுள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக எம்.எஸ். தோனி தன் மனைவி ஷாக்‌ஷியுடன் இணைந்து தனது ரெஸ்டாரண்டில் வீரர்களுக்கு இரவு விருந்து அளித்துள்ளார்.

விருந்தின் போது வீரர்கள் அனைவரும் ஜாலியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனிடையே தனது சொந்த ஊரில் தோனி விளையாடும் போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.