சொதப்பும் தோனி உள்ளூர் போட்டிகளில் விளையாடட்டும்!:சுனில் கவாஸ்கர் அதிர்ச்சி கருத்து

மீபமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி சோபிக்காத நிலையில், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.

இந்திய அணியில் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி பல்வேறு சாதனைகளை படைத்தவர்.  நீண்ட காலம் கேப்டனாக இருந்த அவர், 2014ம் வருடம் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். பிறகு, கடந்த 2017ம் வருடம்  ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அணியில் மட்டும் பங்கேற்று வருகிறார்.

இதையடுத்து கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்றார். ஆனாலும் களத்திலும் பயிற்சியின் போதும் தோனி இரண்டாவது கேப்டனாகவே செயல்பட்டு வருகிறார். இக்கட்டான நேரங்களில் விராட் கோலிக்கு தோனி ஆலோசனை கூறுவார்.

இந்த நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரக நாடுகளில்  நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.

இதில் தோனியின் பேட்டிங் எடுபடவில்லை. சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளிலும்  தோனி சொதப்பினார்.

இதனால் அவரது பேட்டிங் திறன் குறைந்துவிட்டதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கடெ அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார் அவர், “தோனி தனது ஆட்டத் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் கவனம் செலுத்த வேண்டும். ஜார்க்கண்ட் மாநில அணியுடனான பயணத்தை அவர் தொடர்கிறார் என்பதை அறிவேன். அவர்களுடன் இணைந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது தோனியின் ஆட்டத் திறனை மேம்படுத்தும். மேலும்  இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் அமையும். ஆகவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் தோனி கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் இழந்த ஃபார்மை தோனி மீண்டும் பெறலாம்” என்று   சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

You may have missed