ஆகஸ்டு 15 சுதந்திரத்தினத்தன்று லடாக்கில் கொடியேற்றுகிறார் ‘தல’ தோனி

--

டில்லி:

ந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருக்கும்,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, காஷ்மீர் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, லடாக்கில் உள்ள லே நகரில் நடை பெறும் சுதந்திரத்தின விழாவில் பங்குகொண்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றுவார்  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், அங்கு வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது ஜம்மு காஷ்மீர்,  இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, .  புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக்கின் லே நகரில் வருகின்ற ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திரத்தன்று,இந்தியத் தேசிய கொடியை தோனி ஏற்றுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டில் நடைபெற்ற  உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், தோனி  இரண்டு மாத ராணுவப் பயிற்சிக்கு செல்லஇ ருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன் படி 106 பாரா டி ஏ பாராசூட் ரெஜிமெண்டில் சேர்ந்த தோனி தற்போது காஷ்மீரில் பணியாற்றி வருகிறார்.அவரது பயிற்சி ஆகஸ்டு 15ந்தேதியுடன் முடிவடைகிறது.