Random image

கிரிக்கெட் வீரர் தோனியின் 37வது பிறந்த நாள் (வீடியோ)

ந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் 37வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவருக்கு சக வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

இந்திய அணியின் சாதனை நாயகனாக திகழ்ந்து வரும் தோனி தற்போது  தோனிக்கு நேற்று 37வது பிறந்தநாள். தற்போது  இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டி நடைபெற்று வரும் நிலை யில், நேற்று அவரது பிறந்தநாள் இங்கிலாந்தில்  கொண்டாடப்பட்டது.

சக வீரர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் மனைவி மகளுடன்  கேக் வெட்டி தோனி தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவரது பிறந்த நாள் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தோனிக்கு இந்திய கிரிக்கெட் சங்கம் உள்பட பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், நமது நாட்டின் சக வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தோனியுடனான பிறந்தநாள் கேக் பூசிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரெய்னா, ஆசிர்வதிக்கப்பட்ட நாள். மேதை தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களை போல யாருமே இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

இதேபோல சேவாக்கும் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்து உள்ளார். தோனியின்  இரு கால்களும் விரிந்த நிலையில் இருக்கும். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பிரசுரம் செய்து,  இதைவிட உங்கள் வாழ்வு நீட்டிக்க வேண்டும். உங்கள் ஸ்டம்பிங்கைவிட வேகமாக உங்கள் வாழ்வில் அனைத்து மகிழ்ச்சிகளும் கிடைக்க வேண்டும். ஓம் ஃபினிஷாய நமஹ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தோனி பிறந்தநாள் வீடியோ