கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி தனது கையுறைகளைத் தொங்கவிட்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் டிவி வீடியோ மூலம் அறிவித்துள்ளார். அதில் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்க கால நினைவுகள் அனைத்தையும் படங் களாக வெளியிட்டிருக்கிறார். அத்துடன் ’மெயின் பால் தோ பால்’ என்ற மெலடி பாடல் பின்னணியிலொலித்து உருக வைக்கிறது.


எம்.எஸ்.தோனியின் ரசிகர்கள் அந்த டிவி வீடியோவைப் பார்த்த தருணத்திலிருந்து, இது எந்தப் படத்தல் இடம் பெறும் பாடல், அதில் யார் நடித்தது என்று கேட்ட வண்ணமிருக்கின்றனர். அந்த பாடல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த ‘கபி கபி’ படத்திலிருந்து ’மெயின் பால் தோ பால் கா ஷேர் ஹூன்’ என்ற அருமையான பாடல்தான் அது.

இப்படத்தை பிரபல இயக்குனர் யஷ் சோப்ரா இயக்கியுள்ளார். கயாம் இசை அமைத்துள்ளார். பாடகர் முகேஷ் பாடியுள்ளார். சாஹிர் லூதியானிவியின் இந்த பாடல் வரிகள் வாழ்க்கையின் ஒவ்வொரு பயணத்திற்கும் பொருந்தும்.
1976 ஆம் ஆண்டில் வெளியான ‘கபி கபி’ பாலிவுட்டில் ஒரு சிறந்த கிளாசிக் மற்றும் பலருக்கு பிடித்த யஷ் சோப்ரா படமாகும்.

https://www.instagram.com/p/CD6ZQn1lGBi/