கிரிக்கெட்டை தாண்டி டென்னிஸிலும் சாதனை படைத்த தல ‘தோனி’

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் மகேந்திர சிங் தோனி, டென்னிஸிலும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். கண்ட்ரி கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் தோனி வெற்றுள்ளார்.

doni

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனி இருந்த போது டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, ஆசிய உலக கோப்பை என பிசிசிஐயின் அனைத்து கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்தியாவின் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை தோனி வென்றுள்ளார். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்க்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

doni

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி கவுண்ட்ரி கிரிக்கெட் கிளப் சார்பில் நடத்தப்பட்ட டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். இந்த தொடரின் இறுதி போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரர் சுமித் குமாருடன் இணைந்து தோனி இரட்டையர் பிரிவில் விளையாடினார். இந்த ஜோடி எதிரணியை 6-3,6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கிரிக்கெட்டை தாண்டி டென்னிஸிலும் தோனி கால்பதித்து வெற்றிப்பெற்றது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கார்ட்டூன் கேலரி