இரு வார ராணுவப் பணியை முடித்த தோனி

டில்லி

பிரபல கிரிக்கெட் வீரர் தோணியின் இரு வார ராணுவப் பணி முடிவடைந்தது.

பிரபல கிரிக்கெட் வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மகேந்திர சிங் தோனி உலகப் புகழ் பெற்றவர் ஆவார். உலகெங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது வாழ்க்கை கதை திரைப்படமாக வந்துள்ளது. அது மட்டுமின்றி அவருக்கு கௌரவ பதவியாக ராணுவத்தில் லெப்டினெண்ட் காலனல் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு அவர் தனது இரு வார ராணுவப்பணியை தொடங்கினார். தற்போது 37  வயதாகும் தோனி காஷ்மீரில் தனது ராணுவப்பணியில் ஈடுபட்டார். அவர் காவல், பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் தற்போது பணி புரிந்தார்.

காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள சிறுவர்களுடன் அவர் தனது ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகின.

தோனியின் ராணுவப் பணி  சுதந்திர தினத்துடன் முடிவடைந்தது. அதையொட்டி அவர் தற்போது டிலிநக்ருக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது மனைவி சாச்ஷி மற்றும் மகள் ஸிவா வுடன் தனது இயல்பு வாழ்க்கையைத் தொடங்கி உள்ளார்.