மகாராஷ்டிராவில் நாளை முதல் பேருந்து சேவை தொடக்கம்

மகாராஷ்டிரா:
காராஷ்டிராவில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக அமலான ஊரடங்கால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் போக்குவரத்து சேவைகள் தடை செய்யப்பட்டன. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சில மாநிலங்கள் போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளன. அந்த வகையில் மகாராஷ்டிராவில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து சேவைக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.


இதனை மகாராஷ்டிர சாலை போக்குவரத்து கழகம் உறுதி செய்துள்ளது.நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை மீண்டும் தொடங்கவிருக்கிறது. இந்த பயணத்திற்கு இ- பாஸ் தேவையில்லை. இருப்பினும் பயணிகளுக்கான புதிய விதிமுறைகளை போக்குவரத்து கழகம் விரைவில் அறிவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.