சென்னை : 400 நகர பேருந்து சேவை முடக்கம்

சென்னை

மாநகர போக்குவரத்துக் கழகம் சுமார் 400 பேருந்து சேவைகளை முடக்கி உள்ளதால் பயணியர் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.   இதில் தற்போது சுமார் 15000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.   அவர்களுக்கு பதிலாக வேறு தொழிலாளர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை.  இதனால் சுமார் 200 பேருந்து சேவைகள் ஆளில்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் உடல் நிலை மற்றும் சொந்த வேலைகள்காரணமாக பணியாளர்கள் விடுப்பு எடுக்கின்றனர்.   தற்போது இவர்களுக்கு மாற்றுப் பணியாளர்களும் கழகத்தில் இல்லை.  இதனால் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் நிலை உண்டாகிறது.

ஏற்கனவே பயணக்கட்டணம் உயர்ந்துள்ளதால் பலர் பேருந்துக்கு பதில் ரெயில் சேவையை உபயோகப்படுத்தி வருகின்றனர்.  இதனால் தற்போது வசூல் குறைந்துள்ளதால் மேலும் சில பேருந்து சேவைகளை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பேருந்து சேவை முடக்கம் அதிகரிப்பதால் பய்ணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.   பெரும்பாலான வழித்தடங்களில் மதிய வேளைகளில் பேருந்து இயங்குவதில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.