அமெரிக்காவை வாட்டும் வரலாறு காணாத கடுங்குளிர்: பேரழிவை ஏற்படுத்தும் என அச்சம்!

சிக்காகோ:

மெரிக்காவில் நிலவி வரும் வரலாறு காணாத கடுங்குளிர் கடந்த 2014ம் ஆண் டைய கடுங்குளிரை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த குளிர் காணமாக பல இடங்கள் உறைந்து காணப்படுகிறது. இந்த கடுங்குளிர் பேரழிவை ஏற்படுத்தும் என அஞ்சப் படுகிறது.

துருவச் சுழல் காரணமாக அமெரிக்காவின் மிச்சிகன் உள்பட பட மாநிலங்களில் கடுமையான குளிர் காற்று வீசி வருகிறது.  இது அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்து உள்ளது.  இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவுவதாக மக்கள் கூறுகின்றனர்.

நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குளிர் மிக மோச மாக இருக்கிறது. சிகாகோவில் மைனஸ் 30 டிகிரி அளவிலும், மிச்சிகனில் மைனஸ் 23 டிகிரி அளவிலும் குளிர் நிலவுகிறது. இது, மைனஸ் 50 டிகிரியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

துருவ பகுதியில் இருக்கும் குளிரை விட இப்போது அமெரிக்காவில் அதிக குளிர் வீசுகிறது. பல இடங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதுடன் கடும் குளிர் காற்றும் வீசுகிறது. சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு இருக்கிறன.

பல இடங்களில் விமானத்தை இயக்க முடியவில்லை. இதனால் 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடும் குளிருக்கு தாக்கு பிடிக்க முடியாது என்பதால் மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று சிகாகோ மேயர் அறிவித்துள்ளார்.

அங்குள்ள கிரேட் லேக்ஸ், நியூ இங்கிலாந்து பகுதியில் நேற்று கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. இதன் காரணமாக 7 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விஸ்கான்சின், மிச்சிகன், இல்லினாய்ஸ், மிசிசிப்பி, அலபாமா ஆகிய மாநிலங் களில் குளிர் நிலை மிக மோசமாக இருப்பதால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு இதுபோன்ற போலார் வோர்டெக்ஸ் எனப்படும் துருவ சுழல் காரணமாக கடுமையான குளிர் நிலவியதாகவும், அப்போதும் மிச்சிகன் பகுதியில் உள்ள ஏரி உறைந்து போனது.  அதுபோலவே தற்போதும் வரலாறு காணாத அளவுக்கு குடுங்குளிர் நிலவுவதாகவும் கூறப்படுகிறது பல  பகுதிகள் பனியால்  உறைந்து காணப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது  இயற்கைக்கு மாறான நிலை என்பதால் பேரழிவை உருவாக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chicago to freeze, extremely similar in nature, Much of the American Midwest, Polar vortex, record-breaking lows, seven deaths., அமெரிக்கா குளிர், கடுங்குளிர் அமெரிக்ககா, சிக்காகோ, போலார் வோர்டெக்ஸ், மிச்சிகன்
-=-