பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் மலேசியாவை சேர்ந்த தமிழரான முகென் ராவ் .

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது முகென் ராவுக்கு என்று தனி ரசிகைகள் பட்டாளமே உருவானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்து விடும் . அபப்டி தான் முகென் ராவை தேடி ஹீரோ வாய்ப்பு வந்துள்ளது.

வெப்பம் படம் புகழ் அஞ்சனா அலி கான் இயக்கும் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார் முகென் ராவ். ‘வெற்றி’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

வெற்றி’ திரைப்படத்தில் முகென் ராவ்க்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடிக்கிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வானவர்.

முகென்ராவ், அனு கீர்த்தி வாஸ் உடன் வெற்றி திரைப்படத்தில் நடிகர் கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.