க்ரா

முகலாய அரசு வம்சத்தை சேர்ந்த இளவரசர் டூசி தனது குடுமபத்தாருடன் தாஜ்மகாலை பார்வை இட்டார்.

முகலாய மன்னரான பாபர் இந்தியாவின் மீது படை எடுத்து இந்தியாவில் முகலாய அரசை அமைத்தார்.   அவருக்குப் பின் அவருடைய வம்சத்தை சேர்ந்த பலர் இந்தியாவை ஆண்டு வந்தனர்.   அவர்களில் ஒருவரான ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.     ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய இந்தக் கட்டிடத்தில் மும்தாஜ் மற்றும் ஷாஜகான் ஆகிய இருவரின் சமாதியும் உள்ளது.

இந்த முகலாய வம்சத்தை சேர்ந்தவர் இளவரசர் ஹபீபுதீன் டூசி.   இவர் தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் ஆக்ரா வந்து தாஜ்மகாலை பார்வை இட்டார்.   காவல் படையுடன் வந்த இவர் தனது மூதாதையரால் கட்டப்பட்ட தாஜ்மகாலை சுற்றிப் பார்த்து பெருமிதம் அடைந்துள்ளார்.    இது குறித்து அவருடைய அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில். “மரியாதைக்குறிய இளவரசர் ஹபிபுதீன் டூசி தனது குடும்பத்தினருடன் தாஜ் மகாலை கண்டு ரசித்தார்.  தனது மூதாதையர் கட்டிய இந்த மாபெரும் கட்டிடத்தைக் கண்டு அவர் பெருமை அடைந்துள்ளார்” என செய்தி அளிக்கப்பட்டுள்ளது.

Picture courtesy : Tucy’s Twitter page