வெளியானது கார்த்திக் ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘முகிலன்’ ட்ரைலர்….!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தியில் நடிக்கும் கார்த்திக் ராஜ் ஜீ-5 நிறுவனத்திற்காக ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார்.

இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.முகிலன் என்று பெயரிடப்பட்டுள்ள

இந்த சீரிஸில் ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘முகிலன்’ வெப் சீரிஸ் கேங்க்ஸ்டர் கதையம்சத்தை கொண்டது.

ராபர்ட் மாஸ்டர், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.‘முகிலன்’ வெப் சீரிஸ்ஸை ஸ்ரீ ராம் ராம் எழுதி இயக்கியுள்ளார். தினேஷ் ரமணா (இன்சடியஸ் மீடியா), பால சுந்தரம் (இன்சிடியஸ் மீடியா), ஜெயச்சந்திரன் (இன்ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்) ஆகியோர் தயாரித்துள்ளனர்.பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.முகிலன்”அக்டோபர் 30 ஆம் தேதி ZEE5ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.

இந்நிலையில் தற்போது முகிலன் ட்ரைலர் வெளியாகியுள்ளது .