முகமது அலியின் மரண அஞ்சலியிலும் அரசியல் சர்ச்சை

ஹிலாரி - டொனால்ட்
ஹிலாரி – டொனால்ட்

குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மரணம் அமெரிக்காவில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று இயற்கை எய்திய பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் இறுதிச் சடங்கு  வரும் வெள்ளிக்கிழமையன்று ,கென்டகி மாநிலத்திலுள்ள அவரது சொந்த சொந்த ஊரான லூயிஸ்வில்லில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், அவரது மரணத்துக்கு, வர இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் அஞ்சலி செய்தி வெளியிட்டார். அதில், “ ஒரு உண்மையான மற்றும் மகத்தான சாம்பியனான முகமது அலியின் இழப்பை அனைவரும் உணர்வர்வார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கெனவே இவர், “அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் வருகை புரிவதை தடை செய்ய வேண்டும்” என்று இவர் பேசியபோது, அதை முகமது அலி கண்டித்திருந்தார்.

இந்த நிலையில் முகமது அலிக்கு டிரம்ப்ட்  அஞ்சலி அறிக்கை வெளியிட்டிருப்பதை, ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் கண்டித்துள்ளார். அவர், “டிரம்ப் போலித்தனமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அவரது வார்த்தைகளையும், செயல்களையும் கொண்டே அவரை  எடை போட வேண்டும்” என்று ஹிலாரி தெரிவித்துள்ளார்.