மலேசியாவின் புதிய பிரதமராக முஹையாதீன் யாசின் தேர்வு: நாளை பதவியேற்க ஏற்பாடு

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய பிரதமராக முஹையாதீன் யாசின் நாளை பதவியேற்கிறார்.

மலேசியாவில் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி, மக்கள் நீதிக் கட்சி ஆகிய இரு கட்சிகள் இணைந்து 2018ம் ஆண்டு பகதான் ஹரப்பன் என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைத்தன.

94 வயதான மகாதிர் 2வது முறையாக 2018ம் ஆண்டில் மலேசியாவின் பிரதமராக  பதவியேற்றார். தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

இதையடுத்து மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரதமர்  மகாதிர் முகமது ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றார். இதை தொடர்ந்து பிரதமர் பதவியை மகாதிர் ராஜிநாமா செய்தார்.

இந் நிலையில் அரசியல் நாடகங்களின் அடுத்த திருப்பமாக, மலேசியாவின் புதிய பிரதமராக முஹையாதீன் யாசின் நாளை பதவியேற்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகோ எம்.பி யாசின் நாளை காலை 10.30 மணிக்கு நாட்டின் 8வது பிரதமராக பதவியேற்க உள்ளார். 73 வயதான முஹையாதீன் அரசியலுக்கு முன் முன்னாள் அரசு ஊழியர். துணை பிரதமராகவும் இருந்திருக்கிறார்.

கார்ட்டூன் கேலரி