முகேஷ் அம்பானிக்கு ரூ.4.17 கோடி சம்பளம்….ரிலையன்ஸ் தலைவராக நீடிப்பு

மும்பை:

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான திருபாய் அம்பானி 2002-ம் ஆண்டு காலமானதை தொடர்ந்து தலைமை பொறுப்பை அவரது மூத்த மகன் முகேஷ் அம்பானி ஏற்றார்.

ரிலையன்ஸ்   குழும பங்குதாரர்களின் 41-வது வருடாந்திர கூட்டம் 5-ம் தேதி மும்பையில் நடைபெற்றது.

முகேஷ் அம்பானியின் பதவிக்காலம் வரும் 19-.4.-2019 அன்றுடன் முடிவடைகிறது. அவரையே மீண்டும் தலைவராக நியமிக்க கோரும் தீர்மானம் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதை ஆதரித்து 98.5 சதவீதம் பங்குதாரர்களும், எதிராக 1.48 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

இதையடுத்து, மேலும் 5 ஆண்டு காலத்துக்கு ரிலையன்ஸ் குழும தலைவராக முகேஷ் அம்பானி நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆண்டுக்கு 4.17 கோடி ரூபாய் சம்பளம், இதர படிகள் 59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

You may have missed