ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்

டில்லி:

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மாவை அவர் ஓரங்கட்டி முதலிடத்தை பிடித்துள்ளார்.இந்த பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

4,400.3 கோடி டாலர் மதிப்பு சொத்துடன் முகேஷ் அம்பானி முதல் இடத்திலும், அலிபாபா நிறுவனத்தின் ஜேக் மா 4,400 கோடி டாலர் சொத்துடன் 2ம் இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2018 ம் ஆண்டில் 400 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது என்பது குறுப்பிடத்தக்கது.