லக பணக்காரர்கள் பட்டியலை பிரபலமான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. அதில்,  ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 13வது இடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில், 19வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, தற்போது 13வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அதேசமயம், அவரது சகோதரர் அணில் அம்பானி, 1349வது இடத்தில் இருந்து வருகிறார்.

ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள் யார் என்பது குறித்து ஆய்வு நடத்தி பட்டியலை வெளி யிட்டு வருகிறது  ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

இந்த ஆண்டு வெளியாகி உள்ள பட்டியலிலி, அமேசானின் நிறுவனர் பெசோஸ் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.  இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.9.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

அதுபோல கடந்த  2018-ம் ஆண்டு சுமார் ரூ.2.83 லட்சம் கோடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது சுமார் ரூ.3.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு 19வது இடத்தில் இருந்தவர், தற்போது   6 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார்.

அதுபோல  இந்தியப் பணக்காரர்களின்  முகேஷ் அம்பானி முதலிடத்தில் தொடர்ந்து வருகிறார். விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி 36-வது இடத்தில் உள்ளார். ஹெச்.சி.எல். இணை நிறுவனர் சிவ் நாடார் 82-வது இடத்திலும் லக்‌ஷ்மி மிட்டல் 91-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியப் பணக்காரர்களின் பட்டியல் ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் பிர்லா (122), அதானி குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான கௌதம் அதானி (167), பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் (244), பதஞ்சலி ஆயுர்வேதாவின் இணை நிறுவனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா (365), பிராமல் நிறுவனங்களின் தலைவர் அஜய் பிராமல் (436), பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார்-ஷா (617), இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி (962) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.