மும்பை: கொரோனா வைரஸ் காரணமாக பங்கு சந்தைகள் சரிவை சந்தித்து வருவதால், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானி, தனது சொத்து மதிப்பில் 28% அளவிற்கு இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்திலிருந்த அவர், தற்போது 17வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனாவால் சாதாரண மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

பங்குச்சந்தையில், கடந்த 2 மாதங்களில் ஏற்பட்ட சரிவால் நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் டாலர் (ரூ 23,000 கோடி) சரிந்து 48,000 கோடி டாலர்களாக (ரூ.36.54 லட்சம் கோடி) குறைந்துள்ளதாக ஹருன் குளோபல் ரிச் லிஸ்ட் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய கடந்த 2 மாதங்களில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 19,000 கோடி டாலர் குறைந்ததால், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 9-வது இடத்திலிருந்து 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.