ரிலையன்ஸ் ஜியோவில் 80 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு

மும்பை:

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவுள்ளது.

இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவன மனிதவள பிரிவு தலைமை அதிகாரி சஞ்சய் ஜாக் கூறுகையில், ‘‘தற்போது வரை இந்நிறுவனத்தில் 1.57 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அடுத்து இந்த நடப்பு நிதியாண்டிற்குள் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 32 சதவீதம் விற்பனை பிரிவிலும், தொழில்நுட்பம் பிரிவில் கட்டுமானத்திற்கும் தேர்வு செய்யப்படும். தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 6 ஆயிரம் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.