முக்கரம்பாக்கம் ஏரி உடைந்தது

திருவள்ளூர்:

திருள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் ஏரி உடைந்த்து நீர் வெளியேறி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளயம் அருகே உள்ளது முக்கரம்பாக்கம் ஏரி. தற்போது பெய்து வரும் கனமழை காரணாக ஏரியில் நீர் தளும்பி நின்றது.

எந்த நேரத்தலும் ஏரி உடைந்து நீர் வெளியேறக்கூடும் என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்த நிலையில் தொடர் மழை காரணமாக முக்கரம்பாக்கம் ஏரி உடைந்த்து.

தற்போது நீர் வெளியேறி, விளை நிலங்களில் பாயந்துவருகிறது. இதனால் விசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.