பழைய மனக்கசப்பை மறந்த மாயாவதி : முலாயம் சிங் உடன் பிரசாரம்

க்னோ

னது முன்னாள் அரசியல் எதிரியான முலாயம் சிங் உடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி பிரசாரம் செய்ய உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளன. சுமார் 26 வருடங்களுக்கு பிறகு இரு கட்சிகளும் கூட்டணியில் இணந்துள்ளன. கடந்த 1998 ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி அமைப்பாளர் முலாயம் சிங் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி அமைப்பாளர் கன்ஷி ராம் ஆகியோர் கூட்டணி அமைத்தனர்.

முந்தைய சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே கூட்டணி முறிந்ததில் இருந்தே இரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான விரோதம் இருந்து வந்தது. முலாயம் சிங் உடன் கன்ஷி ராம் நட்பை தொடர விரும்பிய போதெல்லாம் மாயவதி எதிர்ப்பு தெரிவித்து வந்தார் இதனால் முலாயம் சிங் யாதவ் மற்றும் மாயாவதி இடையே மனக்கசப்பு தொடர்ந்து வந்தது.

சுமார் 26 ஆண்டுகள் கழித்து தற்போதைய கட்சி தலைவர்கள் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதி ஆகியோர் மிண்டும் கூட்டணி உறவை புதிப்பித்துள்ளனர்.

இந்த மக்களவை தேர்தலில் முலாயம் சிங் யாதவ் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்புரி தொகுதியின் இருந்து போட்டி இடுகிறார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி இணைந்து 11 பேரணிகளில் கலந்துக் கொள்கின்றனர்.

இதில் முலாயம் சிங் யாதவ் போட்டியிடும் மெயின்புரி தொகுதியிலும் பேரணி நடைபெற உள்ளது. அந்த பேரணியில் முலாயம் சிங் யாதவ் கலந்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.