என் நண்பர் பரூக் அப்துல்லா எங்கே? லோக்சபாவில் சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் கேள்வி

டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், எம்பியுமான பரூக் அப்துல்லா எப்போது வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது ஜம்முகாஷ்மீர் விவகாரம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். என்னுடன் அவையில் எப்போதும் உட்காரும் பரூக் அப்துல்லா, எப்போது அவைக்கு திரும்புவார்?

ஆனால் அவைத் தலைவர் ஓம்பிர்லா இதை பற்றி அரசின் பதில் பற்றி தெரிந்து கொள்ளாமல் அடுத்துள்ள நபரை கேள்வி கேட்க அனுமதித்தார்.

370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை தொடர்ந்து 2019 ஆகஸ்ட் 5ம் தேதி முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டவர் அப்துல்லா.

முன்னாள் முதல்வரும், அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா மற்றும் மற்றொரு முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி ஆகியோரும் ஆகஸ்ட் 5 முதல் 2019 முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி