முலாயம் சிங்குக்கு எதிராக  சகோதரர் தொடங்கிய புதிய கட்சி

க்னோ

மாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலயாம் சிங் யாதவின் இளைய சகோதரர் புதிய கட்சியை தொடங்கினார்.

முலாயம் சிங் யாதவால் தொடங்கப்பட்ட சமாஜ் வாதி கட்சி தற்போது உத்திரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக உள்ளது.    இந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களாக முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயமின் இளைய சகோதரர் சிவபால் யாதவும் ஆகியோர் உள்ளனர்.  இதில் சிவபால் யாதவ் கடந்த சில மாதங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

சிவபால் யாதவ் அதை ஒட்டி மதச்சார்பற்ற சமாஜ்வாதி என்னும் புதிய கட்சியை நேற்று தொடங்கி உள்ளார்.   சிவபால் யாதவ், “நான் கடந்த இரு ஆண்டுகளாக சமாஜ் வாதி கட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளேன்.    நான் முலாயமுக்கு ஆதரவு அளிக்காததால் அவர் மகன் அகிலேஷ் எனக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்குவதில்லை.

கட்சியில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு அனுப்புவதே கிடையாது.   இவ்வாறு ஒதுக்கப்பட்டதால் நான் மன உளைச்சல் அடைந்துள்ளேன்.   அதனல் நான் மதச்சார்பற்ற சமாஜ்வாதி என்னும் புதிய கட்சியை தொடங்கி உள்ளேன்.  என்னை போல் பலர் கட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.   நான் அவர்களை ஒருங்கிணைத்து எனது கட்சியை பலப்படுத்துவேன்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

You may have missed