முல்லை பெரியாறு நீர்மட்டம் தொடர்பான வழக்கு: 3 வாரங்கள் விசாரணையை தள்ளி வைத்த சுப்ரீம்கோர்ட்

டெல்லி: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்கள் ஆதாரமற்றவை என்று மத்திய நீர்வள ஆணையம் உச்சநீதி மன்றத்தில் கூறி உள்ளது.

அணை பாதுகாப்பை கருதி நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 130 அடியாக குறைக்க உத்தரவிட கோரி ரசல் ஜாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு நிலுவையில் இருந்தது.

இந் நிலையில், இன்று நீதிபதி ஏ.எம். கான்கில்கர் தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய நீர்வள ஆணையம் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ஆஜரானார்.

அணையின் தற்போதைய நீர்மட்டம் 130 அடியாக இருப்பதையும், 10 ஆண்டுகளாக சராசரி நீர்மட்டம் 123.21 அடியாக உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். அணை பாதுகாப்பு குறித்து மனுதாரர் தரப்பில் கூறப்பட்டவை உறுதியான தகவல்கள் அல்ல என்றும் தெரிவித்தார்.

மனுதாரரின் இந்த சந்தேகங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டார். அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்கள் தொலைந்து விட்டதால், அதன் நகல்களை பெற 3 வாரங்கள் அவகாசம் தருமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை 3 வாரங்கள் ஒத்தி வைத்தனர்.

You may have missed