வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் மும்பை தாக்குதல் குற்றவாளியின் சகோதரர் பங்கேற்பு

டில்லி:

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள பாகிஸ்தான் அரசு பிரதிநிதிகள் குழு வருகை புரிந்திருந்தது. இதில் மும்பை 26/11 தாக்குதல் வழக்கில் சதி குற்றச்சாட்டிற்கு ஆளான தாவூத் கிலானி என்கிற டேவிட் கால்மன் ஹெட்லேயின் ஒன்று விட்ட சகோதரரும், பாகிஸ்தான் அரசு அதிகாரியுமான டானியல் கிலானி கலந்தகொண்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த பிரதிநிதிகள் குழுவில் டானியல் கிலானியும் இடம்பெற்றுள்ளார்.

டானியல் கிலானி பாகிஸ்தான் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்த துறை அமைச்சராக இருந்து பதவி விலகும் சையது அலி ஜப்பாருடன் அவர் டில்லி வந்துள்ளார். டில்லியில் நடந்த வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் டானியல் கிலானியின் வருகை பலருக்கும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்ப டுத்தியது.

‘‘டேனியல் கிலானியின் சகோதரர் ஹெட்லே பாகிஸ்தானி பட்டியலில் இடம்பெற்றிருப்பதும், தாக்குதல் வழக்கில் இவர் பெயர் இடம்பெற்றிருப்பதும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தெரியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவருக்கு எப்படி விசா கொடுத்தார்கள்? என்ற கேள்வியுள் எழுந்துள்ளது..

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீம் அப்சல் கூறுகையில்,‘‘ஹெட்லேவில் சகோதரர் இந்தியா வர எப்படி அரசு அனுமதி வழங்கியது?. இதற்கு பதில் கூற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.